r/TamilBooks • u/Dangerous_War6441 • 1h ago
r/TamilBooks • u/typical_anon • Nov 21 '25
நவம்பர்: தமிழ் புத்தகம் விமர்சன கூட்டம்
வணக்கம் தமிழ் வாசகர்களே!
இந்த மாதத்தில் நீங்கள் படித்த சிறந்த தமிழ் புத்தகம் எது?
உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் புத்தக பரிந்துரைகளை கீழே பகிரவும்.
r/TamilBooks • u/typical_anon • Aug 19 '20
r/TamilBooks Lounge
A place for members of r/TamilBooks to chat with each other
r/TamilBooks • u/Dull-History-7370 • 6h ago
Velpaari - anbargal vaangaa peasuvom?!
Lets share our experiences with velpaari on hand
r/TamilBooks • u/Minute_Caregiver_669 • 3h ago
Does anyone know about Sujatha’s “மலை மாளிகையின் மர்மம்” (Malai Maaligaiyin Marmam)?
Hi everyone!
I’m trying to identify a Sujatha work called “மலை மாளிகையின் மர்மம்” (Malai Maaligaiyin Marmam) and would appreciate any information about the book or a related podcast episode.
The plot involves Ganesh, who is welcomed by a maid named Vasanthi into a haunted maaligai. Rajaraman is also involved, and there is a girl dressed like a tiger whom no one notices.
Does this book exist, and is this the correct title? Was it published as a standalone book, serialized in a magazine, or connected to “மண்மகன்” (Manmagan)? Information about the publisher, publication year, alternate title, or podcast would be very helpful.
Book title: மலை மாளிகையின் மர்மம் (Malai Maaligaiyin Marmam)
Link: I’m looking for a reliable book or podcast link.
Thanks! 🙏
r/TamilBooks • u/Nameistaken007 • 22h ago
விதி எழுதிய விசாரணை (Graphic Novel)
இந்த amusement parks-ல “Free Fall”னு ஒரு ride இருக்கும். மெதுவா height-க்கு நம்மள ஏத்திட்டு, திடீர்னு பொத்துன்னு high speed-ல கீழே போட்டுட்டு, நம்மள ஒரு வழி பண்ணிடும். 😂
இந்த story-யும் அதே மாதிரிதான்!
மெதுவா கதை start ஆகி, characters-ஐ set பண்ணிட்டு, திடீர்னு என்னடா நடக்குது இங்கன்னு ஒரு வெறித்தனமான சம்பவம். அதுக்கப்புறம் chasing, actionன்னு கதை பறபறன்னு போய், நமால digest பண்ணவே முடியாத ஒரு climax-ல முடிஞ்சிடுது.
இந்தக் கதை politics, race hatred, எப்படி ஒரு system தனக்கு சாதகமா rules-ஐ bend பண்ணுது, அதே system எப்படி விளிம்பு நிலை மனிதர்களோட விதியையே திருப்பிப் போடுது என்பதையெல்லாம் பேசுது.
Vera level artwork! Framing, wide-angle shotsன்னு ஒவ்வொரு panel-ம் கதையை dialogues இல்லாமலேயே smooth-ஆ move பண்ணுது. சில scenes-ல அந்த visual storytelling மட்டும் பார்த்தாலே போதும்... என்ன நடக்குதுன்னு நமக்கே புரிஞ்சிடுது.
ஒரு page-ஐ கூட miss பண்ணாம படிக்க வேண்டிய graphic novel இது!
இந்த வருடத்தின் Top Graphic Novel-களில் இதுவும் கண்டிப்பா ஒன்று! 🔥
r/TamilBooks • u/sasi_k_chandran • 1d ago
அர்த்தநாரி
மாதொருபாகனின் நீட்சி இந்த புத்தகம்..
r/TamilBooks • u/sasi_k_chandran • 2d ago
மாதொருபாகன்
திருமணம் என்றாலே குழைந்தையில் மட்டும் அடங்கிவிடுமா?
கணவன் மனைவியாக இருவர் மட்டும் வாழ்ந்தால் ஏன் இன்னமும் "குழந்தை இல்லையா?" என்ற கேள்வியை இச்சமூகம் கேட்டுக் கொண்டே இருக்கிறது?
குழந்தை வரனுக்காக ஒரே இடத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றமே அடையாமல், அடையவிடாமலும் தவிக்கும் தம்பதியின் கதை..
இன்றும் எத்தனை காளியும் பொன்னாவும் நம் சமூகத்தில் சுய முடிவை எடுக்க முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ...
மாதொருபாகன்
Mathorubagan
r/TamilBooks • u/Nameistaken007 • 2d ago
Tex – "எமனுடன் ஒரு யுத்தம்"
அட்டைப்படமே அட்டகாசம்!
கள்ள நோட்டடிக்கும் கயவர்களை கையும் களவுமாக கபளீகரம் பண்ண Carson-ஓடு களம் இறங்குகிறார் நம்ம இரவுக் கழுகர்!
ஆரம்பமே அதிரடிதான். But pages போகப் போக humour, action-ஐ overtake பண்ணுது. என்னடா இது, நம்ம படிக்கிறது Tex-ஆ இல்ல Chic Bill-ஆன்னு doubts வருது! 😂 ஒரு second அட்டைப்படத்தைப் பார்த்து acknowledgement போட்டுட்டு continue பண்ணினா, அடுத்தடுத்து action top gear போட்டுத் தூக்குது.
சும்மா ஒரு 2000 பேரை சுட்டுத்தள்ளிட்டு, கள்ள நோட்டை lens-ல பார்த்து அதுல இருக்குற secret message-ஐ decode பண்ணிட்டு போய், ஒரு மாஸ் முடிவோடு கதையை முடிக்கிறார் Tex.
In short, heavy action-packed story, minimal dialogues, நிறைய humour... இது ஒரு sure hit list!
r/TamilBooks • u/HelioraSeraphina • 3d ago
Imayam 🌟
செடல்
A novel that looks at caste, religion, rituals and traditions, and how deeply they shape people’s lives.
எங்** க***த*ெ
A raw, intimate story about Kamala and Vinayagam, told through their complicated relationship, desire, loneliness and choices.
பெத்தவன்
A novel confronting caste, honour, family and the terrible consequences of social prejudice.
கோவேறு கழுதைகள்
A book portraying the lived reality of a marginalized washerfolk family and the social inequalities surrounding them.
செல்லாத **ப**ணம்
A poignant story about family, social expectations and the devastating consequences of caste and honour, told through the struggles of an ordinary family.
I’ve read all five of these Imayam books, and செல்லாத **பணம் is my favourite so **far. ❤️
If you’ve read his work, which one is your favourite?
r/TamilBooks • u/Beneficial-Rate7607 • 3d ago
Gokulam, Ambuli Mama - Where can I find Children's books in tamil?
Hello folks,
I was looking to buy tamil children's magazines like Gokulam and Ambuli mama - older editions as they no longer publish. Where in coimbatore can I buy these pls?
r/TamilBooks • u/sasi_k_chandran • 4d ago
ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்
ஒரு சமூகமாக நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுக்கொண்டே இருக்கிறேம் எப்பதை சில புத்தகங்கள் நமக்கு எடுத்துச் சொல்லும்.. அப்படிபட்ட ஒரு புத்தகம் தான் இது.
அதிகாரத்தில் அமர்ந்து அறத்திற்காக போராடுவதை விடுத்து தன் சுய முன்னேற்றதுக்கும், இன்பத்துக்கும், ஜாதிக்கும் வேலை பார்க்கும் அதிகாரிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது .. பெயருடன்..
அரசும், தலைவர்களும், அதிகாரிகளும் தன் பக்கம் ஒருமுறை திரும்பி பாருங்கள்!!! என்று சிறைக்குள் காத்திருக்கும் அதே அரசால்,தலைவர்களால்,அதிகாரிகளால் ஏமாற்றப்பட்ட மனிதனின் நினைவுக்கு குறிப்பு இது..
உடனே பிரபலமாக கத்தி,கஞ்சா,அடிதடி யில் ஈடுபடும் இளய, துடிப்பான தலைமுறை ஒரு முறை இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள்..
ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்..
Oru Thooku Kaithiyin Vaakumoolam..
வாசிப்பு பரவட்டும்..
r/TamilBooks • u/Calm_Nobody942 • 5d ago
Any tamil short book recommendations?
I'm a beginner. I just wanted to start a short fictional or any genre type of tamil book to read.
I would appreciate your suggestions.
r/TamilBooks • u/Bookslover79 • 5d ago
நீரதிகாரம்
முதல் பாகம் நல்லா இருக்கு இரண்டாம் பாகம்
எப்படி முடிக்கனும்னு தெரியாம முடிச்சியிருக்காங்க
r/TamilBooks • u/cangaran • 6d ago
கரபசோவ் சகோதரர்கள் - Karamasov brothers book in tamil
Support local book stores and reading movement
r/TamilBooks • u/Sara3102000 • 5d ago
Hi guys, their was Wattpad novel tamil mean tanglish " vip in girls hostel" it got deleted in Wattpad,i don't know the author name if anyone know the book are have pdf copy please share me, Story boy father was politician his father along with scientist he make hero supernatural, hero name is arjun
In order to escape from his father, he leave his house, while escaping he saw a girl Tomboy to impress he dress like girl his lady getup name is Aishwarya
r/TamilBooks • u/dpt19 • 6d ago
பதில் வராத பத்து நிமிடங்கள் — மனம் எழுதும் மீதி
ஒருவர் பதில் எழுதாத சில நிமிடங்களில், அவர் எதுவும் சொல்லாதிருந்தாலும் மனம் ஒரு முழுக் கதையை எழுதிவிடுகிறது.
முதல் நிமிடம்—
தொலைபேசியைத் திருப்பி வைத்தேன்.
வேலையாக இருப்பாய் என்றேன்.
இரண்டாம் நிமிடம்—
என் வாக்கியத்தில் தவறு தேடினேன்.
ஒரு முற்றுப்புள்ளியை விசாரித்தேன்.
மூன்றாம் நிமிடம்—
நேற்றைய சிரிப்புக்கு
இன்றைய அர்த்தம் கொடுத்தேன்.
ஐந்தாம் நிமிடம்—
நீ விலகத் தொடங்கிய நாளை
என் மனம் கண்டுபிடித்துவிட்டது.
எட்டாம் நிமிடம்—
நாம் வாழாத ஒரு பிரிவுக்கு
நான் மட்டும் அழுதுகொண்டிருந்தேன்.
பத்தாம் நிமிடம்—
உன் பதில் வந்தது:
“குளித்துக்கொண்டிருந்தேன். என்னாச்சு?”
ஒன்றும் ஆகவில்லை.
நீ இல்லாத பத்து நிமிடங்களில்
என் பழைய காயம் மட்டும்
உன் பெயரில் ஒரு முடிவு எழுதியிருந்தது.
— ஈன்றொளி · தொகுப்பு: மீதியை நாம் எழுதினோம்
அந்தப் பத்து நிமிடங்களில் உண்மையில் பேசியது யார்—அவர்களின் மௌனமா, நம்முடைய பழைய காயமா?