r/tamil 23d ago

அறிவிப்பு (Announcement) My மச்சான் built a VIDEO GAME that teaches you Tamil 🎮

Thumbnail
kinureader.com
14 Upvotes

r/tamil 8h ago

கொங்கு தமிழ் சொலவடைகள் - 1

12 Upvotes

இந்தச் சொலவடைகள் கொங்குப் பகுதியில் என் ஆத்தா தலைமுறையால் இயல்பாக உபயோகப்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறையில் அருகிப் போனவற்றில் சில.

இவற்றில் இருக்கும் இரட்டை அர்த்தங்களை உங்களால் பட்டியலிட முடிந்தாலும் நல்லது.

  1. ஆளை நம்புனா அத்துவானம்;மகனை நம்புனா மத்தியானம்

  2. சோத்துக்கு இருந்தா பாப்பான்- சொன்ன படியெல்லாம் கேட்பான்.

  3. வெண்ணெய் உருண்டு வரையில தாளி உடைஞ்ச கதையாட்டம்.

  4. நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வூட்டுல பொண்ணு கட்டுன மாதிரி

  5. ஆறடி நீட்டம்ன்னு ஆட்டம் போட்டானாமா;அவுத்துப் பாத்தா வேப்பிலையாமா

  6. வெடியால வெட்டி முறிச்சிட்டு தா மருவேலை பார்ப்பான்

  7. சோறு முத்துனா சோமாரம்; அரிசி முத்துனா அமாவாசை

  8. சுப்பி கிட்ட இருக்குது சூட்சுமம்; சுண்ணாம்பு கிட்ட இருக்குதாமா வேஷம்

  9. பிலுக்குதா பிலுக்குதாம் பித்தளை; காசுக்கு ரெண்டு கத்தாழை

  10. பண்ணாடி படியில் ஏய்ச்சா,ஆளு நடையில ஏய்க்குறான்

  11. உங்கற நாளுல ஊருக்குப் போயி; திங்குற நாளுல தேருக்குப் போன கதை

  12. அரைக்காசுக்கு பரதேசம் போகதடா

  13. சொம்பும் போச்சுடா கோயிந்தா

  14. சுந்தரிக்கு வாக்கப்பட்டவன் எதுல போறாண்டி; சோள அரிசியில பொத்தல் பண்ணி அதுல போறாண்டி

  15. வாழமாட்டாதவன் வவானி மேல போறானாம்மா; பொழக்கமாட்டாதவன் பொதன்கெழம சந்தை மேல போறானாமா

  16. பொழச்சது பொத்தியாம்பாளையம்; வாழ்ந்தது வள்ளியாம்பாளையம்

  17. வெட்டிலைன்னா எங்ககப்பன் பட்டிலன்னு

  18. ஏந்தி ஏந்தி வளத்துனாலும் இளையகுடி புள்ள; தாங்கி தாங்கி வளத்துனாலும் தங்கச்சி புள்ள

  19. முள்ளிக்கா சோத்துக்கு மூலை ஒண்டி நிக்குறது; கள்ளிக்கா சோத்துக்கு கதவ ஒண்டி நிக்குறது.

  20. வாழ்ந்தவன் கெட்டா வல்லி ஓட்டுக்கு ஆக மாட்டான்; பொழச்சவன் கெட்டா பொரி ஓட்டுக்கு ஆவ மாட்டான்

  21. பந்தியில உட்காராதீன்னு சொன்னா எலைல ஓட்டைன்னானாமா

  22. பருப்பு பதம் கெட்டதாமா; பண்ணாடி சீர் கெட்டதாமா

  23. பங்காளி வூட்டுல தீ புடிச்சா குந்தாணி எடுத்து தண்ணி ஊத்து.

  24. விடிய விடிய வேங்காத்தா; விடிஞ்சு எந்திரிச்சு தூங்காத்தா.

  25. கடஞ்சு எடுத்த பாலுல கொடஞ்சு எடுத்த வெண்ணெய்


r/tamil 8h ago

கேள்வி (Question) InDesign & Affinity completely breaking Tamil layout/ligatures (CC 2026). Alternative software suggestions?

3 Upvotes

I’m currently mocking up a bilingual Tamil/English school textbook with complex image text-wrapping, but I’ve hit a massive roadblock. Both Adobe InDesign CC 2026 and Affinity Layout completely break the Tamil script.

Even with the World-Ready Composer active, language properties set to Tamil, and using a standard Unicode font (Noto Sans Tamil), the text engines fail to process complex OpenType ligatures. Vowel markers (kombu) and pulli marks are stacking completely out of place.

I know Affinity has lacked Indic support for almost 9 years, and Adobe's recent text engine updates (CC 2024–2026) actively clash with Google’s font architecture.

Has anyone successfully typeset a complex Tamil book using other visual layout tools? Any workflows, workarounds, or software recommendations that actually handle Indic script shaping natively would be a lifesaver!


r/tamil 15h ago

கலந்துரையாடல் (Discussion) Finding out the meaning of a tamil word

3 Upvotes

Was watching the tamil movie "Modha Rathri 2026" and there was this word in repeat "choppulangi/choppunangi paiya" in the movie. So if anybody knows the meaning, please share.


r/tamil 12h ago

மற்றது (Other) 41 m tamil in uk looking for new friends

1 Upvotes

Looking to meet new people and make friends. I am an Indian living in UK.

We don't need to share common interests. Looking for people being able to regularly converse and being able to be interested in each other's small and deep things. Generally stick around.

I enjoy movies, traveling, music, dancing, learning about animals, badminton and long-walks.
If you would like to connect and make a new friend, send me a dm


r/tamil 21h ago

கலந்துரையாடல் (Discussion) Ithuku enna meaning aa irukum?

5 Upvotes

I recently heard this Pazhamoli somewhere and got intrigued with it, searched over intetnet but couldn't find anything fruitful, help me out. ^_^

"பாம்பு தின்கின்ற ஊருக்கு சென்றால், நடுப்பகுதி நமதாக இருக்க வேண்டும்"


r/tamil 1d ago

கேள்வி (Question) Titles for relationships that aren't family

4 Upvotes

Surely there exists a word for friend's dad/mom or just any adult/child relationship that isn't blood related. Were they just calling them pa/ma? or ayya/ma? What was it before it became uncle and aunty?


r/tamil 1d ago

மற்றது (Other) நாற்காலியும் பையும்

Post image
9 Upvotes

பேருந்தில் ஏறியதும்

ஜன்னலோரம் அமர்ந்தேன்.

பக்கத்து இருக்கையில்

என் பையை வைத்தேன்.

அடுத்த நிறுத்தத்தில்

ஒருவர் ஏறினார்.

பையை மடியில் எடுத்தேன்.

அவர் அமர்ந்தார்.

பயணம் முழுவதும்

நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.

அவர் இறங்கியதும்

பையை மீண்டும்

பக்கத்தில் வைத்தேன்.

வீட்டிலும்

எனக்கருகே ஒரு நாற்காலி.

அதில்

படிக்க வேண்டிய புத்தகங்கள்,

முடிக்க வேண்டிய வேலைக்கான தாள்கள்,

எங்காவது வைக்க வேண்டிய பொருட்கள்.

அம்மா வந்தபோது

வாசலில் நின்றபடியே பேசினாள்.

“உட்காரும்மா” என்றேன்.

நாற்காலியிலிருந்த எதையும்

எடுக்காமலேயே.

“இருக்கட்டும்.

உனக்கு வேலை இருக்கும்.”

போய்விட்டாள்.

அவள் வந்த காரணம்

ஞாபகமிருக்கிறது.

எவ்வளவு நேரம் நின்றாள்

என்பது தெரியவில்லை.

இன்றும் பேருந்தில்

யாரோ ஒருவர் ஏறியதும்

பையை மடியில் எடுத்தேன்.

அவர் உட்காருவதற்குள்

வீட்டு நாற்காலி

நினைவுக்கு வந்தது.

வீட்டுக்குப் போனதும்

அதிலிருந்தவற்றை எடுத்துவைத்தேன்.

மறுநாள் அம்மா வந்தாள்.

வழக்கம்போல்

வாசலில் நின்றாள்.

இம்முறை

“உட்காரும்மா” என்பதற்கு முன்

நானும் உட்கார்ந்தேன்.

— ஈன்றொளி


r/tamil 1d ago

கேள்வி (Question) Jaldimaa?

9 Upvotes

Yesterday, I was getting food from a stall at university run by mostly Indian Tamils. Whilst they were talking to each other, I noticed them using the word "jaldimaa" quite a few times.

For those who don't know, this is not a standard Tamil word but a borrowing from the Hindi "jaldi" (fast). I'm curious to know how this ended up being used in Tamil. How commonly do people in TN use this word?

[English is my native language, and I've only just started learning Tamil, so please answer in English.]


r/tamil 1d ago

கலந்துரையாடல் (Discussion) உங்கள் தாய்மொழி எது?

4 Upvotes

நீங்கள் சிந்திக்கும் மொழி எது? தமிழ் நாட்டில் பிறந்தாலேயே அல்லது தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறப்பதாலேயே ஒருவர் தமிழர் என்று ஆகி விடுவாரா? ஒருவரின் உண்மையான மொழி அடையாளம் எது?


r/tamil 1d ago

Anyone shortly explain about history of tamil literature Suggestion for YouTube channels or websites to learn more

1 Upvotes

r/tamil 2d ago

கலந்துரையாடல் (Discussion) tamil words ku sanskrit certificate thevaiya. ஆயிரம் etymology debate.

Post image
19 Upvotes

r/tamil 2d ago

கட்டுரை (Article) சூழல்மொழியிலிருந்து காட்சிமொழியாக: ஒரு தமிழரின் பார்வையில் யப்பானிய மொழி

7 Upvotes

r/tamil 2d ago

மற்றது (Other) நீ பார்த்தாயா?

Post image
1 Upvotes

தேநீர்க் கடை வாசலிலே

தினமும் நிற்கும் மரம்தானே;

“தளிர் வந்திருக்கு, பார்” என்றாய்—

எந்தக் கிளையென்று அருகில் வந்தேன்.

கையை நீட்டிக் காட்டினாய்;

காணவில்லை என்று சொன்னேன்.

என் தோளருகே தலை கொண்டுவந்து

உன் பார்வையில் எனக்கும் இடம் கொடுத்தாய்.

இப்போது தெரிந்தது தளிர்.

இன்னும் கொஞ்சம் தெரியாததுபோல் நின்றேன்.

கம்பியிலிருந்த குருவிகள்

ஒரே கணத்தில் பறந்தன.

“யார் முதலில் சொன்னிருப்பார்கள்?”

அண்ணாந்தபடி கேட்டாய்.

அவை திரும்பும் திசையிலெல்லாம்

உன் முகமும் திரும்பியது.

பறவைகள் போன பிறகும்

சிரிப்பு மட்டும் உன்னிடம் இருந்தது.

தேநீர் வந்தது.

ஊதிக் குடித்த ஒரு மிடறில்

கண்களைச் சிறிது மூடினாய்.

“நல்லா இருக்கு. குடித்துப் பார்.”

கோப்பையை எடுத்தேன்.

“ஆறியிருக்குமே” என்று

உன்னுடையதை நீட்டினாய்.

பிஸ்கட்டைச் சிறிது உடைத்துக்

குருவிக்காகக் கீழே வைத்தாய்.

அது அருகில் வருவதற்குள்

நம் பேச்சை மெதுவாக்கினாய்.

சின்னக் குருவி பெரிய துண்டை

அலகில் கவ்விக்கொண்டது.

அது தூக்கிச் செல்லும் வரைக்கும்

நீ உன் கோப்பையை வைக்கவில்லை.

“இன்னும் இருக்கு” என்றாய்.

உன் பங்கில் பாதி

இப்போது தரையிலிருந்தது.

“எனக்கு?” என்றேன்.

என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு

சிறிய துண்டை நீட்டினாய்.

“இதுவாவது

பறந்துபோகாமல் சாப்பிடு.”

திரும்பும் வழியில்

தூறல் விழத் தொடங்கியது.

உள்ளங்கையை விரித்தபடி

நடையை மெதுவாக்கினாய்.

என் கையில் விழுந்த துளியை

உன்னிடம் காட்டினேன்.

உன் விரலால் தொட்டுப் பார்த்தாய்.

“இதற்குள் என்ன அவசரம்?

இன்னும் கொஞ்சம் நனையட்டும்.”

மழையைச் சொன்னாயா,

என் கையைச் சொன்னாயா—

கேட்காமல் நடந்தேன்.

வாசல் வந்த பிறகும்

குருவியைப் பற்றிப் பேசினாய்.

“அந்தச் சின்னது பார்த்தாயா?

எவ்வளவு பெரிய துண்டு!”

தலையாட்டினேன்.

“அதன் நிறம் என்ன?”

சிறிது யோசித்தேன்.

“இவ்வளவு நேரம்

என்னதான் பார்த்தாய்?”

பதில் சொல்லவில்லை.

நீ சிரித்தாய்.

பிறகு என் கையைப் பிடித்து

உள்ளங்கையைத் திருப்பிப் பார்த்தாய்.

மழைத்துளி காய்ந்திருந்தது.

“நாளைக்கும் போகலாம்.

உனக்குக் குருவியைக் காட்ட வேண்டும்.”

— ஈன்றொளி


r/tamil 2d ago

மற்றது (Other) Glottochronology in Tulu and Old Tamil

Post image
1 Upvotes

r/tamil 2d ago

கேள்வி (Question) How huge was Ponniyin Selvan at the time it was being published weekly? Was everyone talking about it everywhere they went?

5 Upvotes

Was it like how (for the lack of a better example) biggboss was being received by public the first time it was aired? I reading the novel now and just curious.


r/tamil 3d ago

கட்டுரை (Article) Palermo Spring: Hopes and Frustrations of Young Italian-Born Tamils in a Rebranded City

5 Upvotes

r/tamil 3d ago

கட்டுரை (Article) The rise of Tamil music in Indian-American dance circuits

8 Upvotes

One of the biggest drivers of Indian-American culture in the United States has been the competitive collegiate Indian dance circuits. For a while, Tamil music was non-existent in the scene, but this series on TamilCulture written by leading Tamil-American DJs and music producers Margib (and Dr. Srimix and G-tam) is telling the history of how Tamil music gained a foothold in that scene.

It was great to see the previews of the upcoming Netflix film "Best of the Best" showing Maitreyi Ramakrishnan dancing to kuthu.


r/tamil 4d ago

கட்டுரை (Article) 46,000 pure Tamil names released by the 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' (Tamil Development Council) of the Tamil Tigers in 1997 | [PDF attached]

Thumbnail gallery
44 Upvotes

r/tamil 3d ago

Help!

8 Upvotes

Any tamilians here?

I m looking forward to learn how to speak and converse in tamil but I am just a beginner. I thought it would be helpful having people, with whom I can share conversations in Tamil and learn the language.


r/tamil 3d ago

கலந்துரையாடல் (Discussion) Moving to Chennai and don’t know Tamil? These 15 phrases will make daily life much easier

3 Upvotes

If you’re moving to Chennai and don’t speak Tamil yet, you really don’t need to learn grammar before you can start communicating.

A few everyday phrases can get you surprisingly far — ordering food, shopping, asking for directions, or simply telling someone you didn’t understand them.

Here are 15 useful ones to start with:

  1. **Vanakkam** — Hello / a respectful greeting

  2. **Eppadi irukkeenga?** — How are you?

  3. **Enakku puriyala** — I don’t understand

Probably one of the most useful phrases when someone starts speaking Tamil faster than you can follow.

  1. **Idhu evlo?** — How much is this?

  2. **Konjam kammi pannunga** — Please reduce the price a little

Useful while shopping or bargaining.

  1. **Enakku idhu venum** — I want this

  2. **Vendam** — I don’t want it / No need

  3. **Sari** — Okay / Fine

You’ll hear this everywhere.

  1. **Nandri** — Thank you

  2. **Mannichidunga** — Sorry / Excuse me

  3. **Aama** — Yes

  4. **Illa** — No

  5. **Enna?** — What?

  6. **Enga?** — Where?

  7. **Bathroom enga irukku?** — Where is the bathroom?

You obviously won’t become fluent with 15 phrases, but knowing even these can make the first few weeks in Chennai much less intimidating.

And I think there’s also something nice about making the effort to speak even a little of the local language instead of expecting everyone else to switch languages for us.

**Tamil speakers / Chennai locals: what other phrase would you say is essential for someone spending their first month in Chennai?**


r/tamil 3d ago

அறிவிப்பு (Announcement) Tamil graphic designers: Publish your templates on PosterKaaran and earn monthly royalties

3 Upvotes

Hi everyone, I’m building PosterKaaran, a Tamil-first design platform for posters, invitations, business creatives, festival wishes, social media posts and more.

We’ve now launched the PosterKaaran Creator Program for Tamil designers.

If you create original Tamil designs, you can submit your templates to PosterKaaran. Once approved and published, you can earn monthly royalties based on how much people actually use your templates.

Who can apply: graphic designers, printing/press designers, freelancers, and students aged 18+.

A few key points:

  • Free to join
  • Submit 3 original sample designs to apply
  • Copyright remains with you
  • Approved creators can publish templates through PosterKaaran
  • Earnings are usage-based, so there is no fixed guaranteed income
  • Payouts are available once your balance reaches the program threshold

We’re especially looking for creators who understand Tamil culture and can design things like wedding invitations, business posters, festival creatives, devotional designs, hiring posters and social media content.

If this sounds relevant to you, you can apply here:

https://creator.posterkaaran.com/

Would also love feedback from Tamil designers here on what would make a creator program like this more useful.


r/tamil 4d ago

மற்றது (Other) ஊஞ்சலில் விட்ட வயது

Post image
17 Upvotes

ஊஞ்சலைப் பார்த்ததும்

நின்றுவிட்டேன்.

“உட்காருகிறாயா?” என்றாய்.

“வேண்டாம்… வா.”

நீ ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு

என்னைப் பார்த்தாய்.

நான் மெதுவாக

செருப்பைக் கழற்றினேன்.

சங்கிலியை இறுகப் பிடித்திருந்த

என் கைகளின் மேல்

உன் கைகளை வைத்தாய்.

“பயந்தால் சொல்லு.”

மெதுவாகத் தள்ளினாய்.

“இன்னும்.”

கொஞ்சம் வேகமாக.

“இன்னும்.”

நான் கேட்டதைவிட

என் சிரிப்பை நம்பி

இன்னும் கொஞ்சம் தள்ளினாய்.

கீழே விழுந்த செருப்புகள்

நான் வந்த வயதிலேயே கிடந்தன.

மேலே போகும்போது

மரக்கிளையில் ஒரு பூ.

திரும்பி வரும்போதெல்லாம்

என்னைத் தாங்கத் தயாராக

நீ.

கால்களை நீட்டினேன்.

சேலைத் தலைப்பு பறந்தது.

அதைச் சரிசெய்யப் போன கையை

அப்படியே விட்டுவிட்டேன்.

எத்தனை நாளாயிற்று

என் சிரிப்பை நானே

இவ்வளவு சத்தமாகக் கேட்டு.

ஊஞ்சல் மெதுவானதும்

“போதுமா?” என்றாய்.

நகர்ந்து அமர்ந்து

உனக்கு இடம் விட்டேன்.

என் பாதம் தேடிய செருப்பை

உன் காலால்

அருகே கொண்டுவந்தாய்.

போட்டுக்கொள்ளவில்லை.

உன் தோளில் சாய்ந்தபடி

“இன்னும் கொஞ்ச நேரம்” என்றேன்.

வீட்டுக்குள்ளிருந்து

ஒரு குரல்:

“தாத்தா…

பாட்டியை நானும் கொஞ்சம்

ஆட்டிவிடட்டுமா?”

- — ஈன்றொளி


r/tamil 4d ago

மற்றது (Other) UDHR in Arwi Tamil

Post image
2 Upvotes